காவிரி விவகாரத்தில், கர்நாடக அமைப்புகள் போராட்டம்! நடத்தி வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தமிழகத்தை கண்டித்து தமிழக – கர்நாடக எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்துகின்றன. மேலும் இனி கர்நாடகாவில் ரஜினி-கமல் படங்களை திரையிட அனுமதிக்கமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தைப் போல், தமிழகத்தில் அல்லாமல், மத்திய அரசைக் கண்டித்து திமுக., உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்துவது, வெற்று அரசியல் என்பது, வெளிப்படையாகவே தெரிகிறது. ஸ்டாலின் தன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸை எதிர்த்தும், கர்நாடக அரசை கண்டித்தும், முதல்வர் சித்தராமையாவை எதிர்த்தும் போராட்டம் நடத்தி, தங்களது எதிர்ப்பை பலமாகத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது பலமாக வரத் துவங்கியுள்ளன.