கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள் தங்கள் வாக்குகளை காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று பதிவு செய்து வருகின்றனர். காலை கோயிலுக்குச் சென்று வழிபட்டு பாஜக., முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா வாக்குப் பதிவு செய்தார். மாநிலத்தின் இன்னொரு தலைவரான ஸ்ரீராமுலு இன்று காலை தனது இல்லத்தில் கோபூஜை செய்து, பசுவை வழிபட்டு பின்னர் வாக்குப் பதிவுக்குச் சென்றார்.
#bharatiyajanataparty (BJP) leader #BSriramulu was seen performing ‘gau puja’ (cow worship) just before #KarnatakaElections2018
Read @ANI story | https://t.co/7xjCXGXOaK pic.twitter.com/runRZqEsWT
— ANI Digital (@ani_digital) May 12, 2018