கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க, மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.,களுக்கு 100 கோடி ரூபாய் கொடுக்க பாரதீய ஜனதா முன்வந்துள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகத்தில் எந்த அணியும் பெருபான்மை பெறவில்லை, பாரதீய ஜனதா 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளன. இந்நிலையில், எம்எல்ஏ.,களுக்கு 100 கோடி ரூபாய் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளாவிற்கு சுற்றுலா வர அழைத்த நிலையில் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்களை கொச்சியில் தங்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை நடந்த மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ., கள் கூட்டத்தில் 2 எம்எல்ஏ., கள் பங்கேற்கவில்லை என்றும், அவர்கள் மயமாகி உள்ளனர் என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 12 எம்எல்ஏக்களை காணவில்லை
என்றும்
தேர்தலில் வெற்றி பெற்ற 78 எம்எல்ஏக்களில் 66 பேர் மட்டுமே காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.