அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! தங்கள் எம்.எல்.ஏ.,க்கள் மீது நம்பிக்கை இல்லாமல் செல்போனில் உளவு பார்த்த காங்கிரஸ்!

Published:

05 May16 yedyurappa - 2026

பெங்களூர்: தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் விலை போகிறார்களா என்று கண்காணிக்கவும், அவ்வாறு கண்காணிப்படுவதை அவர்களுக்கு மறைமுகமாக உணர்த்தியும் ஒரு அரசியல் சித்து விளையாட்டை காங்கிரஸ் நடத்தியுள்ளது. அவ்வாறு தங்களை கண்காணித்து, தங்கள் செல்போன்களை உளவு பார்த்து காங்கிரஸ் கட்சி தனது அவநம்பிக்கையை தங்கள் மீது வெளிப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனராம்!

இந்தச் சம்பவம் குறித்து ஓர் ஆடியோவை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. அதில், காங்கிரஸ் எம்எல்ஏ., பி.சி.பாட்டீலுடன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளீதர் ராவ், பாஜக.,வின் ஸ்ரீராமுலு ஆகியோர் பேசியதாக காங்கிரஸ் கட்சி கூறியது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி மாற்றி வாக்களித்தால், அவர்களின் பதவி பறிபோகாமல் அவைத்தலைவர் அவர்களைக் காப்பார் என்று எடியூரப்பா கூறியதாக அந்த ஆடியோவை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். இந்த ஆடியோவில் எடியூரப்பாவே காங்கிரஸ் எம்.எல்.ஏ பாட்டீலுடன் பேரம் பேசி இருப்பதாக அந்த ஆடியோவை வெளியிட்ட காங்கிரஸ், இதனால் எடியூரப்பா பதவி விலகக் கோரியது.

அந்த ஆடியோ பதிவின்படி, கொச்சின் சென்று கொண்டிருக்கும் பாட்டீலிடம், கொச்சினுக்குப் போக வேண்டாம் என்றும், நீங்கள் இங்கே வாருங்கள், உங்களை அமைச்சர் ஆக்குகிறேன். மேலும் என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறேன் என்று கூறியுள்ளாராம் எடியூரப்பா. அதுபோல், எடியூரப்பாவின் மகன் விஜயேந்த்தும் இதுபோல் தொலைபேசியில் பேரம் பேசினாராம். எம்.எல்.ஏ., மனைவியிடம் ரூ.15 கோடி தருகிறோம். அல்லது உங்கள் கணவருக்கு அமைச்சர் பதவி தருகிறோம் என்று பேசியதாகவும் ஓர் ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

mallikarjunakarge kumarasamy gulamnabi sitharamaiya - 2026

இந்த ஆடியோவை பெற்ற விதத்தையும் காங்கிரஸ் கூறியுள்ளது. அது, காங்கிரஸ் கட்சி உருவாக்கி இருக்கும் ஒரு அப்ளிகேசன் தானாம். தங்களது கட்சி எம்எல்ஏ.,க்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும், அவர்களை நட்சத்திர விடுதியில் தங்க வைக்கும் போது, காங்கிரஸ் தங்களின் பிரத்யேக தொழில்நுட்பக் குழு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு அப்ளிகேஷனை, அனைத்து எம்எல்ஏ.,க்களின் மொபைல் ஃபோன்களிலும் இன்ஸ்டால் செய்து கொடுத்ததாம்!

அந்த அப்ளிகேஷன் குறிப்பிட்ட எம்எல்ஏ-வுக்கு அந்த மொபைல் போனில் யாரிடமிருந்தாவது அழைப்பு வந்தாலோ, அல்லது சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ யாரையாவது அழைத்துப் பேசினாலோ, காங்கிரஸ் தொழில்நுட்பக் குழுவுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்புமாம். அதை வைத்து அந்த குறிப்பிட்ட மொபைல் போனின் இன்கமிங், அவுட்கோயிங் கால்களை தொழில்நுட்பக்குழு பதிவு செய்து வந்ததாம். இதனால் அனைத்து எம்எல்ஏக்களின் மொபைல் ஃபோனும் அவர்களுக்குத் தெரியாமலேயே கண்காணிப்பின் கீழ் இருந்ததாம். இவ்வாறுதான் பாட்டீலை எடியூரப்பா அழைத்தபோது அந்த ஆடியோ பதிவு செய்யப்பட்டதாகக் கூறுகிறது காங்கிரஸ்.

இப்படி தங்களின் எம்.எல்.ஏக்களே விலை போய் விடுவார்கள் என்று அவர்கள் மீது அவநம்பிக்கை கொண்டிருந்த காங்கிரஸின் சதித்திட்டத்தை காங்கிரஸே தன் வாயால் வெளிப்படுத்தியுள்ளது. மேலும், எம்.எல்.ஏ,. மனைவியிடம் விஜயேந்த் பேசிய ஆடியோ எப்படி காங்கிரஸுக்கு கிடைத்தது? மனைவியின் செல்போனையும் இப்படி உளவு பார்க்க காங்கிரஸ் ஆப்.,பினை நிறுவி கணவன் மனைவியிடையே பேசப் படும் அந்தரங்கத்தைக் கூட உளவு பார்த்துள்ளதா? என்ற கேள்விக் குறியும் அறுவறுப்பும்கூட இப்போது கர்நாடக மக்களிடம் எழுந்துள்ளது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இது ஒரு புறம் இருக்க, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ஆடியோ போலியானது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது, காங்கிரசின் மோசமான தந்திர வேலைகளில் ஆடியோ சிடியும் ஒன்று! முன்னதாக ராய்ச்சூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவிடம் ஜனார்த்தன ரெட்டி பேசிய ஆடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டது. அதில் அமைச்சர் பதவி மற்றும் தேசியத் தலைவர்களுடன் நேரடியாக சந்திக்க வைப்பதாக கூறும் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டது. ஆனால் அந்த ஆடியோ வெளியீடும் போலியானது எனக் கூறினார்.

இந்நிலையில் இது போன்ற தகவல் மஜத., எம்.எல்.ஏக்களின் மத்தியிலும் பரவியிருந்ததால், அச்சத்தில் இருந்தனர் மஜத எம்.எல்.ஏ.,க்கள். அதனால்தான், அவர்கள் தங்கள் செல்போன்களை பயன்படுத்தாமல், தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் லேண்ட்லைன் எண்ணில் இருந்து பாஜக.,வினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதனை ஊடகம் ஒன்று ஆதாரத்துடன் செய்தியாக வெளியிட்டது குறிப்பிடத் தக்கது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img