08 June04 Kamal1 - 2026இரு மாநில மக்களும் சகோதரத்துவ மனப்பாண்மையுடன் காவிரி விவகாரத்தை தீர்த்துக்கொள்வதே நிரந்தர தீர்வை அளிக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் குமாரசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை பெங்களூருவில் இன்று சந்தித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கர்நாடக முதல்வர் நூறு வருடங்களுக்கும் மேலாக நீடித்து வரும் காவிரி விவகாரத்தை இரு மாநிலங்களும் சகோதரத்துவத்துவ உணர்வோடு அணுகி தீர்த்துகொள்ள வேண்டும் என்றார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் காலா பட விவகாரம் குறித்தோ அரசியல் குறித்தோ கர்நாடக முதல்வரிடம் பேசவில்லை என்று கூறினார். சட்டரீதியாக தீர்த்துகொள்வதை விட இரு மாநில மக்களும் இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக்கொள்வதே காவிரி விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு அளிக்கும் என்று கூறீனார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending