கடந்த 4 வருடங்களில் மருத்துவ துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.: பிரதமர்

கடந்த 4 வருடங்களில் மருத்துவ துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நவீன சிகிச்சை வழங்க தேவையான நடடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் 13 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 8 மருத்துவமனைகள் கட்டும்பணி நடந்து வருகிறது. 58 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளை, மருத்துவ கல்லூரிகளாக தரம் உயர்த்தியுள்ளோம். மருத்துவ துறையில் தரமான உள்கட்டமைப்பு கிடைக்க மத்திய அரசுடன் பல அமைப்புகள் கை கோர்த்துள்ளன.