08/07/2020 11:02 AM
29 C
Chennai

ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் தினம்

சற்றுமுன்...

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியதாக… அமெரிக்கா அறிவிப்பு!

தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை நிறுத்திய ட்ரம்ப், அந்த அமைப்பில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்து இருந்தார்.

வெட்டிவேரு வாசம்! கொரோனா அண்டாத முககவசம்!

நீலகிரி மாவட்டத்தில் வெட்டிவேரில் முகக்கவசம் செய்து அசத்தி வருகிறார், உதகையைச் சேர்ந்த ஐஸ்வர்யா.

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் நம்பர் வாங்கி ஆபாச பேச்சு! இன்ஸ்பெக்டர் கட்டாய ஓய்வு!

இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கு கட்டாய ஓய்வு அளித்து, அவர் நேற்று முன்தினம் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

சொத்துவரியை உடனே செலுத்துங்க: நெருக்கடி தரும் சென்னை மாநகராட்சி!

உடனடியாக செலுத்த வேண்டும் என கொரோனா நெருக்கடி நிலையிலும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

07 June30 Doctors day ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் தினம்அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம் போல, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி நம் நாட்டில் ‘தேசிய மருத்துவர் தினம்’ கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்க மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு இரண்டாவது முதல் அமைச்சராக பதவி வகித்தவர் பிடன் சந்திர ராய் (பி.சி.ராய்). 1882-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்த இவர், நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவராக இருந்துள்ளார்.

1948-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் 1962 ஜூலை 1-ஆம் தேதி வரை 14 ஆண்டுகள் மேற்கு வங்க மாநில முதல்வராக திறம்பட இவர் பணியாற்றி இருக்கிறார். மருத்துவத்துறையில் திறம்பட பணியாற்றி பல்வேறு சாதனைகளை படைத்ததுடன், தன்னலம் பாராது பிறர்நலன் கருதி மகத்தான மருத்துவச் சேவைகள் பல செய்ததால், மத்திய அரசு 1961-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி பிடன் சந்திர ராய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

இந்திய மருத்துவத்துறைக்கு பெருமை தேடி தந்த பிடன் சந்திர ராய், 1962-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தன்னுடைய 80-ஆவது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். அவர் செய்த மருத்துவ தன்னலமற்ற சேவையை நினைவு கூறும் வகையில், இந்திய மருத்துவக்கழகம் அவருடைய பிறந்த நாளும், இறந்த நாளும் ஜூலை 1-ஆம் தேதி வருவதால், அன்றைய தினத்தை `தேசிய மருத்துவர் தினமாக’ அனுசரித்து வருகிறது. தொடர்ந்து மருத்துவத் துறையில் சிறப்பாக சேவையாற்றி வருபவர்களுக்கு `டாக்டர் பி.சி.ராய்’ விருது வழங்கப்பட்டு வருகிறது.

மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர் காப்பவர்கள் தான் மருத்துவர்கள். ஆனால், அவர்களின் ஆயுள் சராசரி மக்களை விட குறைவாக இருக்கிறது என்கிறது இந்திய மருத்துவக் கழகத்தின் (ஐ.எம்.ஏ) ஆய்வு முடிவு.

இந்தியாவில் மருத்துவர்களின் சராசரி வயது 55 முதல் 59 ஆண்டுகளாகவே உள்ளதாம். இது பொது மக்களின் ஆயுளை விட 10 ஆண்டுகள் (சாதாரண மக்களின் ஆயுள் 69 முதல் 72 ஆண்டுகள்) குறைவாகும்.

அதிக மன அழுத்தம், சொகுசு வாழ்க்கை காரணமாக உடல் செயல்பாடு குறைதல், உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஒழுங்கற்ற சாப்பாட்டு வேளைகள் போன்றவை மருத்துவர்களின் ஆயுளைக் குறைத்து வருகிறதாம்.

எனவே, தங்களுக்காக மட்டுமல்லாது, மற்ற உயிர்களை காப்பாற்றவேண்டும் என்ற பொது நலனும் அடங்கி இருப்பதால், மருத்துவர்கள் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை ஆழமாக வலியுறுத்தி மருத்துவர்களுக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.

மருத்துவர் தினம் மற்ற நாடுகளுக்கிடையே மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் தினம்

பின் தொடர்க

17,867FansLike
78FollowersFollow
70FollowersFollow
905FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

மூதாட்டி மகள் வீட்டுக்கு விமானத்தில் செல்ல உதவிய பெண்காவலர்! ஆணையர் பாராட்டு!

தற்போது தனியாக வசித்து வருவதாகவும், இ-பாஸ், விமான டிக்கெட் பெற்றுள்ள நிலையில் தனது தாயை சென்னை விமான நிலையம் வரை அழைத்து வந்து விமானத்தில் ஏற்றிவிடுமாறும் உதவி கோரியிருந்தார்.

சமையல் புதிது.. :

சினிமா...

விஷால் மேனேஜர் கார் கண்ணாடி உடைப்பு!

வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்துள்ளார்.

ஓடிடியில் ஷகிலா வாழ்க்கைத் திரைப்படம்! படக்குழு முடிவு!

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள்

அஜித் கொடுத்த வாழ்வு: நெகிழும் பிரபல இயக்குநர்!

அஜித் அவர்கள் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் நம்பிக்கையை தருபவர்.

பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்

விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

செய்திகள்... மேலும் ...