உச்சநீதிமன்றம் நிகழ்வுகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம்: தலைமை வழக்கறிஞர்

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றங்களின் நிகழ்வுகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், பரிசோதனை முறையில் உச்சநீதிமன்றத்தில் இருந்து நேரலை செய்யும் தொழில்நுட்பத்தை செயல்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

வழக்குகள் விசாரணையை இனி நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.

மேலும் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வழிமுறைகளை 23 க்குள் உருவாக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்ற வழக்குகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதால் கிராமப்புற மக்களும் அறிந்துகொள்வார்கள் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.