21 July09 Thirupathi - 2026திருப்பதி ஏழுமலையான் தரிசனம் இன்று 5 மணிநேரத்துக்கு ரத்து செய்யப்பட உள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட 4 உற்சவங்களுக்கு முன் ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்படுவது வழக்கமாகும்.

அதன்படி வரும் ஜூலை 17ம் தேதி திருமலையில் ஆனிவார ஆஸ்தானம் எனப்படும் புதிய கணக்கு தொடங்கும் உற்சவம் நடைபெற இருக்கிறது.

அதனால் இன்று ஏழுமலையான் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட உள்ளது.

இதையொட்டி, நாளை காலை 6 மணிமுதல் 11 மணிவரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோயில் சுத்தம் செய்யப்பட்ட பின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending