நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனையாவது இடம் பிடிக்கும் என்று மத்திய நிதி துறை அமைச்சர் அருண் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல், தங்களுக்கான தேர்தல் இல்லை என்பதை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
இந்த தேர்தல் முடிவில், காங்கிரஸ் கட்சி 3-வது இடத்துக்கு ஓரம்கட்டப்படும். மாநில கட்சிகள் அடங்கிய கூட்டாட்சி முன்னணி, எதிர்க்கட்சி அந்தஸ்தை கைப்பற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.