பாஜக அறிமுகப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் காகிதங்களில் மட்டுமே உள்ளனஎன்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாஜக அறிமுகப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் காகிதங்களில் மட்டுமே இருக்கின்றன. விவசாயிகள் தற்கொலை, இளைஞர்களுக்கு ஏற்பட்டு வரும் மன அழுத்தம், பணவீக்கம் அதிகரிப்பு என பல்வேறு பிரச்னைகளில் பாஜக தலைவர்கள் அடிப்படையற்ற அறிக்கைகளை விட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி உ.பி. முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார். ஆனால், மாநில அரசு சிறப்பான எந்த திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை.
யோகி அரசு ஏழை விவசாயிகளை கண்டு கொள்வதில்லை. ஏற்கனவே 15 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டணத்தை மாநில அரசு இன்னும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. 15 நாட்களில் விவ்சாயிகள் பிரச்னை தீர்க்கப்படும் என உறுதியளித்த பாஜகவினர் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.