அவதூறு கருத்து பரப்பியதாக கூறி 5 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீது ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியானது. அக்கட்டுரை தங்கள் நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டிய ரிலையன்ஸ் நிறுவனம், அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து அடுத்த மாதம் 7ஆம் தேதிக்குள் பதிலளிக்க நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.