கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.7,000 கொடுத்தால் ஜாமீன் என்று குற்றவாளிகளுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.!
கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் மூன்று பேருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஜார்கண்டில் மோசடியில் ஈடுபட்ட உத்பால் ரே, தனேஷ்வர் மண்டல் மற்றும் சம்பூ மண்டல் ஆகிய மூவரும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி ஏ.பி.சிங் தலைமையிலான அமர்வு, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு உத்பால் ரூ.7,000 செலுத்த வேண்டும் என்றும், மற்ற இருவரும் ரூ.5,000 செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த நிபந்தனையுடன் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தொகையை செலுத்தி, அதன் ரசீதை அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலும் இதேபோன்ற உத்தரவுகளை நீதிபதிகள், சில குற்றவாளிகளுக்கு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது!