பெண்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபா முன்னியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்திவந்த பிரபா முன்னி வேலைவாங்கித் தருவதாகக் கூறி பெண்களை டெல்லிக்கு அழைத்து வந்து விற்றுவிடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்தப் பெண் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இந்தப் பெண் குறித்து தகவல் அளிப்போருக்கு ஜார்க்கண்ட் போலீசார் 25 ஆயிரம் ரூபாய் பரிசும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி டெல்லி பஞ்சாபி பாக்கில் பிரபா முன்னியை போலீசார் கைது செய்தனர். அவருடன் கெஜ்ரிவால் இருக்கும் புகைப்படம் சர்ச்சையாகியுள்ளது.