சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக ஷிர்டிக்கு வரும் பிரதமர் மோடியிடம் நேரில் முறையிட முயன்ற பெண்ணியவாதி திருப்தி தேசாய் புனேயில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது பெண் போலீசாருக்கும் திருப்தி தேசாயின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மகாராஷ்ட்ராவில் உள்ள சிங்கனாபுர் சனிபகவான் கோவிலில் பெண்களை அனுமதிக்க மறுத்த போது தமது ஆதரவாளர்களுடன் சென்று கோவில் கருவறை புகும் போராட்டம் நடத்திய திருப்தி தேசாய், சபரிமலை அய்யப்பன் கோவிலிலும் பெண்களை அனுமதிக்க கோரியும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Popular Categories