IMG 20181209 WA0028 - 2026

தில்லி சென்றிருந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி, எழுத்துரிமை, பேச்சுரிமை போன்ற சுதந்திரங்கள் மத்தியில் ஆளும் அரசால் பறிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளனர். விவசாயிகள் நலனில் அக்கறையில்லாத அரசாக மத்திய அரசு உள்ளது.

நாட்டில் நடப்பது பா.ஜ. ஆட்சி அல்லாமல் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. மோடி ஆட்சியில் இரண்டு ரிசர்வ் வங்கி ஆளுனர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

மேகதாது பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவாக காங். மூத்த தலைவர் சோனியா உறுதி அளித்துள்ளார் என்றார்.

One response to “விவசாயிகள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை: ஸ்டாலின்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending