குடியரசு தினவிழாவில் பங்கேற்க வந்த தென்னாப்பிரிக்க அதிபரை வரவேற்ற மோடி!

இந்தியா சற்றுமுன்
southafficanpresident india republic - 2026

குடியரசு தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்துள்ளார் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா!

ஜோகன்னஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர் மோடி. இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுக்கு அழைப்பு விடுத்தார். இதை அடுத்து, சிரில் ரமபோசா இன்று தில்லி வந்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது

தொடர்ந்து, பிரதமர் மோடி – ரமபோசா இடையே இந்திய தென்னாப்பிரிக்க இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் கூறப் பட்டது.

இதனிடையே, இந்தியா – தென்னாப்பிரிக்க வர்த்தக மன்ற நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றுப் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.