budget parliament - 2026

புது தில்லி: நடுத்தர வர்க்கத்தினர் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தனி நபருக்கான வரிமான வரி விலக்கு உயர்த்தப் பட்டுள்ளது.

தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.50இல் இருந்து இரு மடங்காக ரு.5 லட்சமாக உயரும் என்று கூறினார் பியூஷ் கோயல்.

நேரடி வரி வருவாய் ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி 6.85 லட்சமாக அதிகரித்துள்ளது. மக்கள் எளிதில் வருமான வரித்துறையை அணுகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை 24 மணி நேரத்தில் சரிபார்த்து, தேவைப்பட்டால், பணத்தை திரும்பப் பெறும் முறை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது என்று கூறினார்.

ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை உள்ளவர்கள் வருமான வரிச்செலுத்த தேவையில்லை!.

வீட்டு வாடகைக்கான வரிவிலக்கு வரம்பு
ரூ. 1.80 லட்சத்தில் இருந்து
ரூ. 2.40 லட்சமாக உயர்வு.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 

வீட்டுக்கடனுக்கான வட்டிச்சலுகை இனி இரண்டு வீடுகளுக்கு கிடைக்கும்

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் 3 கோடி நடுத்தரவர்க்கத்தினர் பயன்பெறுவர்.
வரி விலக்கு சலுகையால் அரசுக்கு ரூ. 18000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

ரூ.6.5 லட்சம் வரை வருவாய் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில முதலீடுகளை செய்தால் வருமான வரியில் இருந்து விலக்கு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending