இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்; சிஆர்பிஎஃப் வீரர்கள் 18 பேர் வீரமரணம்!

Published:

kashmir5 - 2026

இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய திடீர் தாக்குதலில் காஷ்மீரில் 18 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

ஜம்மூ-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் ரோந்து வாகனம் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 44 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டம், அவந்திப்போராவில், ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், 20க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

kashmir blast - 2026

தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 18 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 44 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img