pinarayi vijayan - 2026

திருவனந்தபுரம்: தனது பலத்தை நிரூபிக்க ராகுல் பாஜக., போட்டியிடும் தொகுதி ஒன்றில் போட்டியிட வேண்டும்; ராகுல் மோதுவது பாஜக,வுடன் அல்ல.. எங்களுடன் தான் என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் கோபத்துடன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதி தொகுதியில் மட்டுமின்றி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி இன்று அறிவித்தார்.

இதை அடுத்து, ராகுல் போட்டியிடுவதற்கு எதிராக, கேரளத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இது தொடர்பாக பேசிய கேரள முதல்வர் பிணராயி விஜயன், ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஆச்சரியம் இல்லை. பாஜக.,வை ஏன் எதிர்த்து போட்டியிடவில்லை. தனது பலத்தை நிரூபிக்க பாஜக போட்டியிடும் தொகுதியில் ராகுல் எதிர்த்து போட்டியிட வேண்டும். இடதுசாரி முன்னணியை எதிர்த்து ராகுல் போட்டியிடுவதால் நாங்கள் காங்கிரஸுக்கு கடும் போட்டியாக இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending