sachin-daughterமும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன் மகள் குறித்து வெளியான செய்திகளால் தற்போது வேதனை அடைந்துள்ளார். அவரது 17 வயது மகள் சாரா புதிதாக எடுக்கப்படவுள்ள படத்தில் நடிக்கப் போவதாக வதந்தி பரவியது. அந்தப் படத்தில் சாகித் கபூர் ஜோடியாக நடிப்பார் எனவும் தகவல் வெளியானது. ஆனால் இது வெற்று வதந்தியே என்கிறார் சச்சின். எனது மகள் படத்தில் அல்ல… படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். அவர் சினிமாவில் நடிக்கப் போவதாக வெளியான தகவல் என்னை வேதனைப் படுத்துகிறது என அவர் தெரிவிதுள்ளார். உலக சாதனைகள் பல படைத்துள்ள சச்சினின் வாழ்க்கை குறித்து ஆவணப் படம் தயாராகிறது. இது குறித்து சச்சின் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தனது ரசிகர்களிடம் கடந்த மார்ச் மாத்தில் ஆலோசனை கேட்டார். இந்தப் படத்தை மும்பையின் 200 நாட் அவுட் என்ற நிறுவனமும் வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் குரூப் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. லண்டனில் வசிக்கும் இயக்குனர் ஜேம்ஸ் எர்ஸ்கின் இதை இயக்குகிறார். இதில் சச்சின் நடிப்பதுடன் பெருமளவில் நிதி உதவியும் செய்துள்ளாராம்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending