சுங்கச் சாவடியில் பணம் செலுத்த மறுத்த ஆந்திர அமைச்சர் மனைவியின் கார், நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி அமைச்சரான ப்ரதிபதி புல்லா ரெட்டியின் மனைவி, மங்களகிரி பகுதியில் உள்ள காஸா சுங்கச்சாவடியை கடந்த போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சரின் மனைவியின் காரையே மறிப்பதா என்று அவர் வாக்குவாதம் செய்தார். எம்.எல்.ஏ. ஸ்டிக்கரை காண்பித்தும், கார் விடுவிக்கப்படாத நிலையில், இறுதியாக பணம் செலுத்திவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டார். அமைச்சர் மனைவி பணம் செலுத்த மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending