CauveryManagementAuthority member masood - 2026

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் தொடங்கியது! தமிழகம் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கர்நாடகா தரப்பில் நீர்வளத்துறை செயலாளர், தலைமை பொறியாளர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தில்லி சேவா பவனில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில்,  காவிரியில் நீர் திறக்க தமிழகம் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தில்லியில் இன்று காலை மீண்டும்  கூடியுள்ளது. கர்நாடகம் தண்ணீர் திறக்காதது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

முன்னதாக, கடந்த மாதம் 28 ஆம் தேதி, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கூடியது. அப்போது 9.19 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் ஆணையம் உத்தரவிட்டது.

கர்நாடகம் தனது அணைகளில் தண்ணீர் இல்லை என்றும், குடிநீருக்கே திண்டாடு கிறோம் என்றும் கர்நாடக அமைச்சர்கள் பேட்டி அளித்தனர். இந்த நிலையில் கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விடாதது குறித்து ஆலோசிக்க இன்று காவிரி மேலாண்மை வாரியம் கூடுகிறது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெற்றுவருகிறது. ஜூலை மாதம், 30 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தும் என கூறப் படுகிறது.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending