
தமிழக இடைத்தேர்தலில் பகவத்கீதையையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் இழித்தும் பழித்தும் பேசிய திக, திமுக, காங்கிரஸ், மதிமுக,விசிக, இந்து விரோத தீயசக்திகளுக்கு தமிழக வாக்காளர்கள் மரண அடி… என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப் பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப் பட்டன. இதில், விக்கிரவாண்டியில் அதிமுக., வேட்பாளர் வெற்றி பெற்றார். திமுக., தோல்வி அடைந்தது.
நாங்குநேரியிலும் அதிமுக., வெற்றி முகத்தில் இருந்தது. இதனை அதிமுக.,வினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்…
இடைத்தேர்தல் முடிவுகள் இந்துக்களுக்கு தமிழக வாக்காளர்கள் தந்துள்ள தீபாவளி பரிசு. வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.
தமிழக இடைத்தேர்தலில் பகவத்கீதையையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் இழித்தும் பழித்தும் பேசிய திக, திமுக, காங்கிரஸ், மதிமுக,விசிக, இந்து விரோத தீயசக்திகளுக்கு தமிழக வாக்காளர்கள் மரண அடி.
திராவிட இயக்கங்கள் ஹிந்தி மொழி மீதும், சமஸ்கிருத மொழி மீதும் தம் இயக்கத்தவர்கள் மனதில் மொழி காழ்ப்புணர்வை வளர்த்தன. ஜாதிக்காழ்ப்புணர்வை வளர்த்தன. நாத்திகம் என்ற போர்வையில் ஹிந்து மதத்தின் மீதும் காழ்ப்புணர்வை வளர்த்தன… -என்று கருத்து தெரிவித்துள்ளார் ஹெச்.ராஜா.
இதைப் போல், திருவரங்கத்தில் கோயிலில் வைத்த பொட்டை அழித்த ஸ்டாலின், நாங்குநேரியில் பாதிரியாரின் ஜபத்துக்கு தலையாட்டி நின்றார்… அதற்கான பரிசு இது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.