பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க… காற்றில் ஆடிய தீபா மெல்ல அழுக…

சென்னை:
ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள். இங்கே பன்னீர் ஆடிய காற்று அழுத்தத்தில் தீபா எனும் புரட்சிப் புயல் ஒன்றுமில்லாமல் போய்விட்டது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டில் கடந்த 2 நாட்களாக ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் தீபா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோர் பிரச்னைக்கு பிறகு
 தீபா குறித்த பேச்சு முற்றிலும் கரைந்து போய்விட்டது.

சசிகலாவின் தலைமையை விரும்பாதவர்கள் தீபாவை ஆதரித்த நிலையில் தற்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர்

ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி முடிவுக்குப் பிறகு தீபாவின் வீட்டுக்கு வரும் ஆதரவாளர்கள் கூட்டம் குறையத் தொடங்கிவிட்டது.

 தம் ஆதரவாளர்கள் தற்போது பன்னீர் செல்வத்தை ஆதரிப்பதால் தீபா தற்போது செய்வதறியாது திகைத்துள்ளார்.. இவர்களை நம்பி கட்சி துவங்குவதா வேண்டாமா என்ற குழப்பத்திலும் இருக்கின்றார் தீபா.