ஜெ. மரணத்தின்பின் மன உளைச்சல் :ஓபிஎஸ் வீட்டுக்கு ராஜினமா கடிதத்துடன் வந்த எஸ்.ஐ

முதல்வர் ஜெயலலிதா மரணத்தால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதால் தான் பணியிலிருந்து விலகுவதாக முதலமைச்சர் ஓபிஎஸ் வீட்டுக்கு ராஜினமா கடிதத்துடன் வந்த உதவி ஆய்வாளரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா மரணம் கட்சி தொண்டர்களை மட்டுமல்ல காவல் துறையினரையும் பாதித்துள்ளது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளது.
ஜெ மேல் தங்களுடைய காவல் பணியையும் மறந்து பாசம் வைக்கின்ற காவலர்கள் தங்கள் பணியே போனாலும் பரவாயில்லை என்று நடந்து கொண்ட பல சந்தர்பங்கள் உண்டு.
ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன விரலை வெட்டி கொண்ட காவலர் உண்டு.
தன நாக்கை துண்டித்து கொண்ட காவலர் உண்டு.
ஜெ பதவியேற்ற சந்தோசத்தை கொண்டாட சீருடையுடன் மொட்டை போட்ட காவலர் உண்டு.
ஜெ மறைந்தபோது தன வீட்டில் துக்கம் நிகழ்ந்ததுபோல் சீருடையில் மொட்டையடித்து கொண்ட காவலர் உண்டு.
சமீபத்தில் கட்சி இரண்டாக பிரிந்ததை அடுத்து தேனீ மாவட்டத்தை சேர்ந்த காவலர் ஒருவர் அரசியல் பற்றி பேசி சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்திற்கு இன்று வந்த எஸ்எஸ்ஐ ஒருவர் திடீரென சத்தமாக அம்மாவுக்காக நான் ராஜினாமா செய்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை அங்குள்ள செய்தியாளர்களிடம் விநியோகித்தார்.
இது பற்றி கேட்ட பொது இது தன்னுடைய ராஜினமா கடிதம் என தெரிவித்தார்.
முதல்வர் ஓபிஎஸ் இல்லத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நூற்றுகணக்கான பத்திரிக்கையாளர்கள் குவிந்துள்ளனர்.
ராஜினமா கடிதத்தை எஸ்எஸ்ஐ கொடுத்தவுடன் அந்த இடமே பரபரப்பானது.
அவர் பெயர் உமாபதி என்பதும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
உடனடியாக அவரிடமிருந்து ராஜினமா கடிதத்தை மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் பறிமுதல் செய்தார்.
அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். ஒரு செய்தியாளரிடம் பேசிய அவர் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தன பதவியை ராஜினமா செய்வதாக தெரிவித்தார். முதல்வர் இறந்து 2 மாதம் கழித்து ராஜினமா செய்கிறீர்களே வேறு எதாவது காரணமா இருக்கிறதா? அதிகாரிகள் டார்ச்சர்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
அதெல்லாம் ஒன்றுமில்லை முதல்வர் இறந்ததிலிருந்து என் மனது சரியில்லை என்று கூறினார்.
அவரது ராஜினாமா கடிதத்தில் நான் 20.0.1986 அன்று காவல்துறையில் இணைந்து இன்று வரை எந்த வித தண்டனையுமில்லாமல் பணி செய்து வருகிறேன்.
முதல்வர் அம்மா இறந்ததிலிருந்து என் மனது சரியில்லை. அதனால் நான் ராஜினமா செய்கிறேன் என்று எழுதியுள்ளார்.
முதல்வர் ஓபிஎஸ் இல்லத்தில் காவல் அதிகாரி ஒருவர் ராஜினமா கடிதத்தை கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.