நடிகை பாவனா மீது தாக்குதல்: மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கண்டனம்

நடிகை பாவனா கடத்தப்பட்டு தாக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற குற்றங்களை தடுக்க முன்னுதாரணமாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் செய்தவர்களை விரைந்து விசாரித்து தண்டனை வழங்க புதிய மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.*