மானம் இல்லாத தமிழர்கள்: கட்ஜூ வேதனை

புதுடில்லி:

தமிழக முதல்வராக பழனிசாமி நீடிக்கும் வரை நான் தமிழனே அல்ல என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேஸ்புக்கில் கட்ஜூ வெளியிட்ட செய்தி: 

எனதருமை தமிழர்களே, 

சிறைக்கைதி ஒருவரின் கைப்பாவை ஒருவர் உங்களின் முதல்வராக ஆக்கப்பட்டுள்ளார். ஆனால், நீங்கள் எதையும் செய்யவில்லை. நீங்கள் சோழர், பாண்டியன் மற்றும் சேரர்களின் சந்ததியர்கள். முதல்வர் நியமனத்தில் செய்யப்பட்ட சதிக்கு நீங்கள் வீழ்ந்ததை பார்த்து உங்கள் மூதாதையர்கள் அவமானப்படுவார்கள். நீங்கள் திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பரின் சந்ததியினர். எந்த எதிர்ப்பும் காட்டாமல், முதல்வரை ஏற்றுக்கொண்டதால், உங்களுக்கு அசிங்கம் ஏதுமில்லையா? நானும் ஒரு தமிழன் என நான் பெருமையாக கூறிவந்தேன். இனிமேல் நான் எந்த முகத்தை வைத்து கொண்டு இதனை சொல்வேன். 

நான் தைரியமாக சொல்கிறேன். பழனிசாமி உங்களின் முதல்வராக நீடிக்கும்வரை நான் தமிழனே அல்ல. அவமானம் மற்றும் மரியாதை பற்றி கவலைபடாமல் வாழும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் நானும் ஒரு உறுப்பினராக இருக்க விரும்பவில்லை. இதற்கு பதில் இறப்பதே மேல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.