உலகின் அதிகாரம் மிக்க இடமாகக் கருதப்படும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற விழாவில் இந்தியாவின் தொன்மை மதமான இ்ந்து மதத்தின் ஆதாரமாக விளங்கும் வேத மந்திரம் ஓதப்பட்டது.
உலக போலீஸ்காரன் என்று அழைக்கப்படும் அமெரிக்கா, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு அதிக பாதிப்புக்குள்ளாகி சுமார் 80 ஆயிரம் உயிரிழப்பை சந்தித்துள்ளது. மேலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இங்கு உயிரிழந்து வருவதால் அமெரிக்க அதிபரின் ஆட்சியும் ஆட்டம் கண்டு வருகிறது.
அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் தேசிய அமைதி தினத்தை அந்நாட்டு அரசு முன்னெடுத்து நடத்தியது. இதில், யசூர் வேத மந்திரத்தை அமெரிக்கவாழ் வேத விற்பன்னர் ஓத, சர்வமதப் பிரார்தனையும் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
காக்கும் கடவுளான நாராயணனைத் துதிக்கும் விதத்தில் வேத மந்திரத்துடன் பாராயணமும் செய்யப்பட்டது. முக்கியமாக, அமெரிக்க அதிபர் டிரம்பின் குடும்ப விருப்படி இதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.