tutucorin

இரவு நேரங்களில் ஆயுதங்களுடன் வலம் வந்த நபரால் தூத்துக்குடி மக்கள் பதறினர். சிசிடிவி கேமராவை வைத்து அந்த நபரை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

தமிழகத்தை ஒரு பக்கம் கொரோனா மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல குடும்பங்களில் பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையில் பல புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஊரடங்கால் பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தில் வன்முறை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே உள்ள மகாநகர், அபிராமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.

tutucorin

இதுகுறித்து முத்தையாபுரம் காவல் ஆய்வாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அந்த மர்மநபர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது.

இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்ததை அடுத்து, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சதீஷை மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்திய காவல்துறையினர், இனி இதுபோன்று நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் எச்சரித்தனர்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending