IMG 20170916 WA0015 - 2026

கோயம்புத்தூரை சேர்ந்த விவசாயி கிஷோர் குமார் என்பவர் கர்ப்பமாக இருக்கும் தன்
வீட்டு பசு மாட்டிற்கு வளைகாப்பு நடத்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

தான் வளர்த்து வரும் பசுமாடு கருவுற்று 9 மாதங்கள் ஆனதையடுத்து ஊர்க்காரர்கள்,
உறவினர்களை அழைத்து வெகு விமரிசையாக வளைகாப்பு சடங்கு நடத்தியுள்ளார்.

புரோகிதர்கள் வந்து மந்திரம் ஓதி, மாட்டிற்கு திலகம் இட்டு, கொம்பில் வண்ண
வண்ண வளையல்களை அணிவித்து, கால்களில் வெள்ளிக் கொலுசுகளை மாட்டி, பட்டுப்
புடவை சாத்தி சீர்களையும் செய்துள்ளது அந்த விவசாயி குடும்பம்.

வளைகாப்பில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் 11 வகையான உணவு விருந்து
அளிக்கப்பட்டது.

வளைகாப்பில் கலந்துகொண்டவர்கள் பசுமாட்டை வணங்கியதொடு மட்டுமல்லாமல்,
நல்லபடியாக பேரு காலம் அமைய வாழ்த்தி சென்றனர்.

நாட்டுமாடுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு வளைகாப்பு
நடத்தியதாக கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் ஆந்திராவின் திருப்பதி அருகே நடைபெற்றதும்
குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

செய்தி .. சாமுராய்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending