sellur-raju-in-madurai
sellur-raju-in-madurai

பாஜக டெல்லிக்கு ராஜானாலும் தமிழகத்தில் தமிழகத்தில் இன்னும் வளர வேண்டும்
– செல்லூர் ராஜூ பேட்டி

மதுரையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள்/ ஒளிப்பதிவாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டார் அமைச்சர் செல்லூர் ராஜு. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்…

இந்தியாவிலயே முதன்முறையாக செய்தியாளர் களுக்கான சிக்கன கூட்டுறவு நாணய சங்கம் அமைத்துக் கொடுத்துள்ளோம் , ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் அறிவிப்பார். ஊரடங்கு குறித்த நல்ல செய்தியை அறிவிப்பார்

ஸ்டாலின் தனது இருப்பை ஊடகங்களில் வெளிப்படுத்துவதற்காக தினசரி அரசுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார், ஸ்டாலினிடம் பாராட்டு பெறுவது என்பது குதிரை கொம்பாக மாறியுள்ளது,

பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து வரும் கூட்ட தொடரில் வலியுறுத்துவோம். மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கைகள் மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது,

தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்க முடியாது என்கிறார் ஹெச்.ராஜா. ஹெச்.ராஜா எதாவது பேசிகொண்டே இருப்பார் , பாஜக தில்லிக்கு ராஜாவாக தமிழகத்தில் இன்னும் வளர வேண்டும் , மோடி போன்ற பிரதமர் யாரும் இல்லை மனிதநேயமிக்க பிரதமர் மோடி மட்டும் தான் !

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

திராவிட இயக்கங்கள் மீதுதான் தமிழகத்தில் சவாரி செய்ய முடியும் என்பது தான் நிலை,

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று விஜய்யை சித்தரித்து போஸ்டர் ஒட்டியது குறித்து சொல்வதானால்… விஜய் ரசிகர்கள் சின்னப் பிள்ளைகள், விஜய் தமிழர் நல்ல நடிகர் அவ்வளவுதான், அவர்களுக்கும் எம்.ஜி.ஆர், அம்மா மீது ஈர்ப்பு உள்ளதை காட்டுகிறது!

நீட் விவகாரம் குறித்த ஸ்டாலினின் அறிக்கையைப் பார்க்கும் போது, இலங்கை தமிழர்கள் மற்றும் நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்றார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending