சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்! அனுமதி கோரி தெற்கு ரயில்வே கடிதம்!

Published:

railway station 1
railway station 1

சென்னையில் இருந்து கூடுதலாக 6 ரயில்கள் இயக்க அனுமதி கோரி தெற்கு ரயில்வே கடிதம் எழுதி உள்ளது.

  • சென்னை – கோவை
  • சென்னை – கன்னியாகுமரி
  • சென்னை – தூத்துக்குடி
  • சென்னை – மேட்டுப்பாளையம்
  • சென்னை எழும்பூர் – மதுரை
  • சென்னை எழும்பூர் – செங்கோட்டைக்கு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. .

சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி கோரி தெற்கு ரயில்வே கடிதம் வெளியிட்டிருக்கிறது !.

சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களுக்கு 6 சிறப்பு ரயில்களை புதிதாக இயக்குவதற்கு ஒப்புதல் கோரியும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிடையே ஏற்கெனவே இயக்கப்பட்ட 7 சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க அனுமதி கோரியும் ரயில்வே வாரியத்துக்குத் தெற்கு ரயில்வே கடிதம் எழுதியுள்ளது. 

special-trains-from-chennai
special-trains-from-chennai

சென்னை – மதுரை பாண்டியன் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – கோவை சேரன் விரைவு ரயில், சென்னை – கன்னியாகுமரி விரைவு ரயில், சென்னை – தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையம் நீலகிரி விரைவு ரயில், சென்னை -செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில் ஆகியவற்றை இயக்குவதற்கு ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே ஒப்புதல் கோரியுள்ளது. 

ஏற்கெனவே இயக்கப்பட்ட 7 சிறப்பு ரயில்களையும் மீண்டும் இயக்கவும் ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே அனுமதி கோரியுள்ளது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img