woman - 2026

சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் போலீஸ் ஏட்டு ஒருவர் சில்மி‌ஷம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அஸ்தம்பட்டியில் நேற்று முன்தினம் போலீஸ் ஏட்டு ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென அங்கிருந்த ஒரு வீட்டின் கதவை அவர் தட்டினார்.

பின்னர் அங்கு தனியாக இருந்த பெண்ணிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். மேலும் செருப்பை காட்டி எச்சரித்தார்.

இதை பார்த்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து அந்த போலீஸ் ஏட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியினர் மாநகர போலீசாருக்கு தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த போலீஸ் ஏட்டு, பெண்ணிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக அந்த பகுதியினர் கூறினர். மேலும் அந்த போலீஸ் ஏட்டு குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

தொடர்ந்து உயர் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த சம்பவம் சேலம் மாநகர போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending