NEPக்கு எதிராக மாணவர்களை கோலம் போடச் சொல்லும் பாளை., கிறிஸ்துவ பள்ளி ஆசிரியை!

Published:

palay-teacher-kolam-message
palay-teacher-kolam-message

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சிறுபான்மை அமைப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் கல்வித் துறையில் சீர்திருத்தத்தையும் 21ம் நூற்றாண்டுக்கான எதிர்கால கல்வித் திட்டம் என்ற அடிப்படையில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு எதிர்கால இந்தியா என்ற திட்டத்தின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுபான்மை அமைப்பினர் நடத்தும் கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு புதிய கல்விக் கொள்கை திட்டத்தை எதிர்க்குமாறு வாட்ஸ்அப் வாயிலாக தகவல்களை பரிமாறி வருகின்றனர் ஆசிரியர்கள்.  

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை எதிர்த்து, வீடுகளில் கோலம் போடச் சொல்லி, திருநெல்வேலி இக்னேஷியஸ் லயோலா  கான்வென்ட் பள்ளி ஆசிரியை  பகிரங்கமாக ஆமோதித்து தகவல் பகிர்கிறார்.

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து 2016ல் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். நெல்லை பாளையங்கோட்டை ஜவகர் திடலில் அவர்கள் நடத்திய அதே போராட்டத்தை இப்போது வேறு விதத்தில் மாணவர்களிடம் திணிக்கின்றனர். 

nep-oppose-minorities
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, 2016இல் சிறுபான்மையினர் நடத்திய ஆர்ப்பாட்டம் (நெல்லை, பாளையங்கோட்டை)

தற்போது மாணவர்களிடையே புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போடவேண்டும் என்று மாணவர்களின் Whatsapp எண்ணுக்கு தகவல் அனுப்புகின்றனர். 

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

புதிய கல்விக் கொள்கையை முழுவதும் சிறுபான்மையினர் மட்டுமே எதிர்ப்பதால் இதில் அரசாங்கம் முழு கவனம் செலுத்தி இத்தகைய  பள்ளிகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளை  அரசுடைமையாக்க வேண்டும் என்றும், இவர்களின் அரசியலுக்கு பள்ளி மாணவர்களின் கல்வியை அழித்து, அவர்களின் அறிவுத்திறனை கேள்விக்குறி ஆக்குகின்றனர் என்பதால், எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி இத்தகைய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும்,  திருநெல்வேலி மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத்  அமைப்பின் பொறுப்பாளர் ஆறுமுகக்கனி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பாளையங்கோட்டை இக்னிஸ் கான்வன்ட் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவிகளின் Whatapp  நம்பர்களுக்கு  இந்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ள  தேசிய புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டில் வாசலில் கோலம் போட வேண்டும் என  கூறுகிறார்கள். பள்ளி மாணவிகளை அரசுக்கு எதிராக போராட அழைப்பது கண்டிக்கத்தக்கது!  அரசு இந்த ஆசிரியை மற்றும் பள்ளி  மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் இது குறித்த குரல் பதிவையும் வெளியிட்டிருகிறார்.  

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

அந்தக் குரல் பதிவு:

Related articles

Recent articles

spot_img