‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி!

சற்றுமுன் தமிழகம் புகார் பெட்டி
otp-vendam-poda1
otp-vendam-poda1

போடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. திமுக எம்பி கனிமொழி மூளையில் உதித்த ஹிந்தி வேண்டாம் போடா என்ற வாசகம் பொறித்த டீசர்ட்டுகள் திமுக சமூக வலைதள பிரிவினரால் பிரபலப்படுத்த பட்டு அவை திமுக சார்பு ஊடகங்களால் விளம்பர செய்திகள் ஆக்கப்பட்டபோது அதற்கு பதிலடியாக அதே போடா என்ற வாசகத்தை பொரித்து பலரும்  எதிர்   வாசகங்களை பகிர்ந்து வந்தார்கள்.

 இப்போது லேட்டஸ்ட் வாசகம் ஓடிபி வேண்டாம் போடா!  என்பதுதான்! இதற்கு தற்போது திமுக மேற்கொண்டு வரும் ஆள் பிடிக்கும் வேலை  தமிழர்கள் எவருக்கும் பிடிக்காது தான் காரணம்! 

ஒரு வடக்கத்தி  பீகார் மாநிலத்தை சேர்ந்த நபரின் ஐடியாவை கேட்டுக்கொண்டு தெலுங்கர்கள் ஆன திமுக  தலைவர்கள், தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை பாரம்பரிய தமிழர்கள் எவரும் விரும்பவில்லை என்பதை இந்த எதிர் கருத்துக்கள் காட்டுகின்றன! 

எஸ்எம்எஸ் மூலம் விளம்பரங்கள் செய்துவரும் நிறுவனங்களின்  போலியான செயல்பாட்டை போல் திமுகவின் செயல்பாடும் மாறியிருக்கிறது. தற்போது திமுக இணையதளம் வாயிலாக மேற்கொண்டுவரும் உறுப்பினர் சேர்க்கும் விவகாரம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மறைந்த இந்திராகாந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி, சுடலை என்றெல்லாம் பெயர் போட்டு திமுகவின் உறுப்பினராக இவர்கள் சேர்ந்து விட்டது போல் உறுப்பினர் அட்டைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் திமுகவின் இணையதள உறுப்பினர் சேர்க்கை விவகாரம் இப்போது பெரும்பாலான செல்போன்களுக்கும் மெசேஜ்களை அனுப்பி  அடுத்தகட்ட பரிமாணத்தை எட்டியுள்ளது 

image
image

ரம்மி விளையாடுங்கள் உங்கள் அக்கவுண்டில் பணம் போட்டிருக்கிறோம் என்று வரும் மெசேஜ்களை போல், உங்கள் பேடிஎம் அக்கவுண்டில் ரூபாய் 15 சேர்க்கப்பட்டுள்ளது என்று வரும் மெசேஜ்களை போல், நீங்கள் திமுகவில் உறுப்பினர் ஆகி விட்டீர்கள் உங்களுக்கான ஓடிபி இதுதான் என்று வரும் மெசேஜ்கள் இப்போது பலருக்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

dmk-message
dmk-message

நாம் எங்கே எப்போது எப்படி திமுக உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பித்தோம் என்று குழம்பி கதிகலங்கிப் போய் உள்ளனர் இவ்வாறு மெசேஜ்களைப் பெறும் செல்போன் வாடிக்கையாளர்கள்!

இருப்பினும் மனம் தளராத வாடிக்கையாளர்கள் சிலர் ஓடிபி வேண்டாம் போடா என்று பதில் மெசேஜ் கொடுத்தாலும் அவை செல்வதில்லை. காரணம் இது ஆட்டோமேட்டட் மிஷின் மெசேஜ் என்பதால்! 

dmk-message1
dmk-message1

எல்லாவற்றிலும் தகிடுதத்தம் பொய் பித்தலாட்டம் என்று வளர்ந்துவிட்ட திமுக., இப்போது அமைதியான செல்போன் வாடிக்கையாளர்களின் அமைதி வாழ்க்கையை குலைக்கும் பொருட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை!

இதுபோன்ற பொய்யான மெசேஜ்களை அனுப்பி செல்போன் வாடிக்கையாளர்களின் தூக்கத்தை கெடுக்கும் நிம்மதியை சீர்குலைக்கும் திமுகவின் செயல்பாடுகளை தடைசெய்ய டிராய் அமைப்பு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் ! எடுக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள் செல்போன் வாடிக்கையாளர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.