நெல்லை மாவட்டம் தென்காசி மீன் சந்தை பகுதியில் இறந்த மீன்கள் விற்பனை செய்யபடுவதாக சென்னை உணவு பாதுகாப்புத்துறை ஆணையருக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் வந்ததுள்ளது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா அளித்த உத்தரவிட்டார் 
அதன் பெயரில் நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் ஆலோசனையின் படி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் ஹக்கிம் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மகேஸ்வரன்,  காதர் முகமது இஸ்மாயில் காசிம் ஆகியோர் காவல்துறை பாதுகாப்புடன் தென்காசி மீன் சந்தை பகுதியில் உள்ள மீன் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர் . 
ஆய்வின் போது ரூ. 15,000 மதிப்பிலான  சுமார் 150 கிலோ தரமற்ற மற்றும் சுகாதாரமில்லாத மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் விளக்கம்  கேட்டு  படிவம்-2 மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் இது போன்று தரமற்ற மீன்களை விற்பனை செய்ய கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இது போன்ற தரமற்ற மீன்கள்    விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending