அறந்தாங்கி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வடகரை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.

 

அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில்  பிரசித்தி பெற்ற வடகரை சிவசுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்;டியை முன்னிட்டு தினமும் சிறப்பு வழிபாடும் அதனை தொடர்ந்து சஷ்டி தினத்தில் சிறப்பு ஆராதனை நடந்தது

 

இந்நிலையில் இன்றிரவு கோயிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிசேகம் செய்து அதனை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்திற்கு பின் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சிவசுப்ரமணியசுவாமி வள்ளி தேவசேனாவிற்கு அலங்காரம் செய்து பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு ஹோமம் செய்து உரிய திருமண மந்திரங்கள் சொல்லப்பட்டு மேளதாளம் முழங்க   பல ஆயிரம் பக்தர்கள் முன்பு திருக்கல்யாணம் நடந்தது இந்த வழிபாட்டில் முன்னாள் எம்எல்ஏ ராஜநாயகம் உட்பட  பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

 

அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending