alagiri

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 7,88,920 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 1400 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இன்று காலை கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் , கடந்த சில நாட்களாக தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending