நிவாரணம் வழங்கும் வகையில் சட்ட விதிகள் தளர்த்தப்படும்

சற்றுமுன் தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று கூறிய முதலமைச்சர், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று கூறினார்.

காணாமல்போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சட்ட விதிகள் தளர்த்தப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.