ஆமாம்… கொரோனா காலத்தில எங்க போனிங்க? கார்த்திக் சிதம்பரத்தை கேள்வி கேட்டு மடக்கிய முதியவர்!

Published:

karthik 1
karthik 1

காரைக்குடி அருகே பனம்பட்டியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பிரச்சாரத்தின்போது முதியவர் ஒருவர் எம்.பி.யை கேள்வி கேட்டு மடக்கியதால் காங்கிரஸார் உஷ்ணமாகினர்.

காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து, பனம்பட்டியில் கார்த்தி சிதம்பரம் எம்பி பிரச்சாரம் செய்தார்.

அப்போது முதியவர் ஒருவர், ‘கொரோனா காலத்தில் எங்களுக்கு எந்த உதவியும் செய்ய வரல..! இப்ப வாக்கு மட்டும் கேட்டு வந்தீட்டீங்களா?,’ எனக் கோபமாகக் கேட்டார்.

இதற்கு, ‘கொரோனா பரவிய காலம் என்பதால் வர முடியவில்லை,’ என கார்த்தி சிதம்பரமும் சிரித்தவாறே சமாளித்தார்.

அதன்பிறகும் விடாத அந்த நபர், ‘சாரி, ஐயாம் ஸ்பீக்கிங் வித் யூ கார்த்தி,’ என ஆங்கிலப் புலமையுடன் பேசினார்.

தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்தைப் அந்நபர் கேள்விமேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்ததால் அவரை காங்கிரஸார் ஓரங்கட்டி அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

யாரும் கேக்குறது இல்ல.. யாரோ ஒருத்தர் வாயத் திறந்தாலும் விட்டறதும் இல்ல.. பதில் சொல்ல நேர்மையும் இல்லனு மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img