ramnad
ramnad

தம்பதிகள் போல வேடமிட்டு சுற்றித்திரிந்த வடமாநில ஆண்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் சிங்கனேந்தல் கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் சுற்றித் திரிந்தனர். பார்ப்பதற்கு பிச்சைக்காரர்கள் போல, ஆண் – பெண் என தம்பதி போல இருவரும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், இவர்களை பிடித்து அந்த கிராமத்து இளைஞர்கள் விசாரணை செய்கையில், இருவரும் ஆண்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அதில் ஒருவர் பெண் போல் வேடமிட்டு உள்ளார்.

இதனையடுத்து, இருவரும் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending