சென்னை: Nokia-India-Chennaiசென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நஷ்டம் காரணமாக மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலையைத் திறக்க தமிழக அரசு முயற்சி எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற சிஐஐ கூட்டத்தில் பேசிய தொழிற்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷங்கர் இதனை தெரிவித்தார். மூடப்பட்ட நோக்கியா ஆலையைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் இந்தக் கூட்டத்தில் கூறினார். முன்னதாக, நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நோக்கியா ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தமிழக அரசின் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஷங்கரும் இதனை கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending