குற்றாலத்தில் நாஞ்சில்
சம்பத் பேட்டி
தமிழக அரசியல் நிலை இல்லாமல் உள்ளது. இந்த
ஆட்சிக்கு எதிராக மக்கள் கோபத்தில் உள்ளார்கள். தமிழகத்தை தற்போது உள்ள அரசு டெல்லியில் அடகு வைத்துள்ளது. தமிழக ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்தையும் மீறி பஞ்சாயத்து தலைவர் போல் செயல்படுகிறார் இதனால் மாநில சுயாட்சி கொடி தமிழகத்தில் அரை கம்பத்தில் பறக்கிறது. மத்திய அரசிற்கு தமிழக அரசு அடிமைபட்டு கிடக்கிறது. தமிழக அரசு மக்கள் தாங்கி கொள்ள முடியாத அளவிற்கு பேரூந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்க எடுத்த முயற்சியே. முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் 1000 வழித்தடங்களை விலைக்கு வாங்கியுள்ளனர்.. இதனால் தமிழக போக்குவரத்து கழகத்தையே மக்கள் வெறுக்கிறார்கள். உயர் கல்வித்துறை ஊழல் மயமாகி விட்டது. இதன் பின்னணியில் உயர் கல்வித்துறை அமைச்சரும் உள்ளார். எனவே சி.பி.ஐ
விசாரணை அமைத்து குற்றவாளிகளை கூண்டில் நிறுத்த வேண்டும். உயர் கல்வித்துறை மட்டுமல்ல எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அனைத்து துறைகளும் ஊழல் மயமாகி விட்டது.
என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்
என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்