தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் குறித்து நேற்று ரஜினி பேசியது குறித்து கருத்து தெரிவித்த ராஜா, தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என ரஜினிகாந்த் கூறியுள்ளது உண்மை. ஏனெனில் செல்வி ஜெயலலிதா அவர்கள் மறைவிற்குப் பின்பு கூட திமுக மீது யாருக்கும் நம்பிக்கை வரவில்லை என்பதையே ஆர்.கே. நகர் எடுத்துக் காட்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
அரசியல் வெற்றிடம் குறித்த கருத்தை தாம் ஏற்கவில்லை என்று தமிழிசை கூறிய நிலையில் அந்த கருத்துக்கு மாறாக ரஜினியின் வெற்றிடம் குறித்து உண்மை என்று எச்.ராஜா கூறியுள்ளதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.