பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் அவர் தனது வருத்தத்தை தெரிவித்துவிட்ட போதிலும் பெரியாரின் தொண்டர்கள் இந்த பிரச்சனையை விடுவதாக இல்லை. ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதால் தமிழகமே பரபரப்பில் உள்ளது.

இந்த நிலையில் திருப்பத்தூரில் பெரியார் சிலை இன்று அதிகாலை மர்மநபர்களா சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து விசாரணை செய்த போலிசார் பெரியாரின் சிலையை சேதப்படுத்தியதாக பாஜகவை சேர்ந்த முத்துராமன் என்பவரை கைது செய்தனர்

இந்த நிலையில் முத்துராமன் என்பவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பத்தூர் நகர ஒன்றியச் செயலாளராக இருந்து வந்த நிலையில் சற்றுமுன் பாஜக தமிழகதலைவர் இவரை பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending