rajapaksha இலங்கை அதிபர் தேர்தலில் தமிழீழ மக்களாலேயே தோற்கடிக்கப்பட்டு படு தோல்வி அடைந்து, அதிபர் பதவியை இழந்த ராஜபட்ச, மன உளைச்சலில் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறிக் கொண்டு இனப் படுகொலையை நடத்தி முடித்த ராஜபட்ச, அவசர அவசரமாக அதிபர் தேர்தலை நடத்தினார். அவரது அதிபர் பதவி இன்னும் 3 ஆண்டுகள் இருந்த நிலையில், விரைவிலேயே தனக்கான வினையை அவர் தேடிக் கொண்டார். அதிபர் பதவியில் ராஜபட்ச தோல்வி அடைந்ததால், அவருக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் தற்போது வசித்து வரும் ராஜபட்ச, வெளியில் தலைகாட்டுவதில்லையாம். மன அழுத்தம் காரணமாக ராஜபக்சவுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையும் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending