சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி, T-20 கிரிக்கெட் இன்னும் 63 ரன்கள் அடித்தால், T-20 கிரிக்கெட்டில் 6000 ரன்கள் அடித்த 5-வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை அடைவார். T-20 போட்டியில் 6000 ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், தோனி ஐபிஎல் போட்டிகளில் 4000 ரன்களை கடக்க இன்னும் 79 ரன்களே தேவை. இன்றைய போட்டியில் மேற்குறிய இரண்டு சாதனைகளை அவர் கடப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.
டோனி தலைமையிலான சென்னை அணி 10 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவை 127 ரன்களில் கட்டுப்படுத்தி அசத்திய சென்னை அணி வெற்றிப்பயணத்தை தொடருவதில் தீவிரம் காட்டும். இன்றைய ஆட்டத்தில் வெற்றி கிட்டினால் சென்னை அணியின் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி விடும்.