அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காரைக்குடி நகரத்தார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி நகரத்தார் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் ரஜினி தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்று அமைச்சர் சொல்லியிருப்பது புண்படுத்துகிற பேச்சாகும். ஆச்சி என்பது நகரத்தார் சமூகத்தில் மணமான பெண்களை குறிக்கி
ன்ற மரியாதைக்குரிய சொல், அவர்களை யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம் என்று அமைச்சர் கூறியுள்ள நாராசமான வார்த்தைகளை கேட்கிற பொழுது எங்கள் நெஞ்சம் கொதிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாமே தவிர தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது என்று, அமைச்சர் செல்லூர் ராஜு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.