தமிழ் ராக்கர்ஸ்க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆதாரமின்றி குற்றஞ்சாட்டிய சவுக்கு சங்கர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று லைகா நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் lycamovie.com என்ற இணையதளம் ஜூலையில்தான் தொடங்கப்பட்டது என்றும் tamilhun தளம் 2014 https://lycamovie.com இணையதளத்தை நடத்திவந்தது என்றும் கூறியுள்ளனர்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், “புலன் விசாரணை நடத்தும் இணையதளம் ஒன்று, தமிழ் ராக்கர்ஸுடன் விஷால் ரகசிய ஒப்பந்தம் வைத்திருப்பதாக ஆதாரத்துடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதற்கு இப்போது வரை விஷால், எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆகையால், அந்த கட்டுரையில் உள்ளது உண்மையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஒன்று, விஷால் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும், இல்லையெனில், தவறான செய்தி வெளியிட்டதாக, அந்த இணையதளம் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் ராக்கர்ஸ் யாருடைய நிறுவனம் என்பதும் விஷாலுக்கு தெரியும். அதை அவர் கண்டுபிடித்தும் விட்டார். ஆனால், அது யார் என்பதை மட்டும் விஷால் சொல்ல மறுக்கிறார். சம்பந்தமேயில்லாமல், விஷாலுக்கு ஏன் லைக்கா நிறுவனம் 22 கோடி கடன் கொடுத்து உதவ வேண்டும்?” என கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து பேசிய மற்றொரு தயாரிப்பாளர், “சுரேஷ் காமாட்சி, தமிழ் ராக்கர்ஸ் யாருடையது என்று வெளிப்படையாக சொல்ல தயங்குகிறார். அது லைக்கா நிறுவனம் தான். லைக்கா நிறுவனமே, தமிழ் ராக்கர்ஸ்-ஐ நடத்தி வருகிறது” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொஞà¯à®šà®®à®¾à®µà®¤à¯ லாஜிக௠வேணà¯à®Ÿà®¾à®®à®¾… படதà¯à®¤à¯ˆ தயாரிபà¯à®ªà®µà®©à¯‡ எபà¯à®ªà®Ÿà®¿à®ªà¯à®ªà®¾ சினிமாவà¯à®•à¯à®•௠எதிரா திரà¯à®Ÿà¯à®Ÿà¯ மூவீ இனையதளம௠தொடஙà¯à®•à¯à®µà®¾à®©à¯!?